Monday 16 July 2012

அவனுக்குத் தெரிந்தது


அவனுக்கு டை கட்டத் தெரியாது
அதில் முடிச்சும் போடத் தெரியாது
அரசியல் கட்டுரை வாசிக்கத் தெரியாது
அரசியலே தெரியாது
சமயங்களில் புலிக்கும் பூனைக்கும் வித்தியாசம் தெரியாது
அதனால் சூடுபோட்டுக் கொள்ளவும் தெரியாது
எந்தக் காளையையும் இதுவரை அடக்கியதில்லை
எந்த மாமன் மகளும் அவன் கழுத்தில் மாலையை வீசியதில்லை

தோற்றுப்போய்விடுவோம் என அதி நிச்சயமாகத்
தெரியும் சில பந்தயங்களில் மட்டும்
அவ்வப்போது கலந்து கொள்வதுண்டு.

No comments:

Post a Comment