Monday 16 July 2012

சாகும்வரை சிரிப்பவன்





அவன் ஆரம்பகால நாடகங்களில்
கதாநாயகனாக நடித்தவன்தான்
கைதட்டி ரசித்த மக்கள் 
உச்சந்தலையில் முத்தமிட்டு வாழ்த்தினார்கள்
கலைஞன் வீடு முழுவதும்  விருதுகள் குவித்தான் 

மேலும் சில நாடகங்களில் வில்லனாக அவனே
விரும்பி நடித்தான்
உணர்ச்சிவசப்பட்ட மக்கள்  சபித்தபடி
விருதுகளையும் பரிசுகளையும் அவன் கையில் திணித்தனர்

ஒரு நாளில் நிர்பந்திக்கப்பட்டான்
கோமாளியாக நடிக்கும்படி


சிரிப்பாய் சிரித்தது வாழ்க்கை
அவ்வளவு பெரிதாக
அவ்வளவு  வலியாக
அவ்வளவு கொடூரமாக
எல்லோர் துயரங்களையும் விரட்டியபடி
சிரித்துக் கொண்டிருந்தது  மேலும் மேலும்

அவனாலும் ஒரு கட்டத்தில் சிரிப்பை அடக்க முடியவில்லை
சிரித்து சிரித்துக்
கண்ணீர் பெருகி ஆறாக ஓடி
மேடையும் மக்களும் மிதக்கத் தொடங்கியபின்னும்
நிறுத்துவதாயில்லை  அவன்
அத்தனை அச்சாகப் பொருந்திவிட்டது கோமாளித் தொப்பி
பழைய கிரீடங்களைத்  துறந்து  ஆட்டம் தொடர்கிறது

இனி மேடையிலிருந்து வீழும் வரை
கோமாளியின்  தர்பார்தான்.
  

நன்றி டங்கு டிங்கு டு  வலை பூ 





 

No comments:

Post a Comment