நிலவுகளில் நெளியும் சட்டைகளை
இமை பொருத்தி உரிக்கிறாய்
விழிகருமணி விரையும்
வரைபடத்தின் இறுதி
அம்மணமாக்குகிறாய் சிசுக்கவிச்சியில்
சீறும் வாசனை நழுவும் நாசியில்
வெப்பத்தின் வாலில் துடித்துக் கடத்தும்
விரல்பின்னிய குளிர்நொடிகள்
ஊறிய எச்சில் உறைந்திருக்கிறது மாணிக்கப் பழமென
பெரும் இரை உண்ட சாம்பல் மனம் அசையும் மெதுவாய்
பிளவுண்ட உதடுகளின் பிசுபிசுப்பில்
மிதக்கும் கண்களில் வழியும் பாம்புகளினால்
கனவுகளில் தேங்குகிறது விஷம்.