Monday, 16 July 2012

இரண்டு எண்கள் கொண்டவன்

எப்போதும் அணைத்துவைக்கப்பட்டிருக்கும் ஒரு எண்ணும் 
எப்போதும் பிசியாயிருக்கும் எண்ணுமாய்
 இரண்டு எண்கள் கொண்டவன் அவன்.


 சில நள்ளிரவுகளில் மட்டும்
காத்திருக்கும் ஒரு  எண்ணினை
எவரும் தொடர்பு கொள்ள முடியாமல்
 போகும்படி மௌனித்திருக்கவிட்டு உறங்கிவிடுகிறான்


மூன்று நாள் முன்பு
புதிதாய் ஒரு எண்ணில் பேசியவன்
பழைய எண்களுடன் வாழ்ந்த வாழ்க்கையை மறந்துவிட்டதாகக் கூறினான்.


இந்தப் புதிய எண்ணாவது உனக்கு
 சந்தோசம் தரச் செய்யட்டும் என்றபடி எண் சேமித்தேன்.  

நள்ளிரவில் வந்த குறுஞ் செய்தியொன்று
' எண் மாற்றியது போல் என்னை மாற்ற என்ன வழி' என்றது.


வேறுவழியின்றி
ஒரு எண் மாற்றப்பட்டது.

No comments:

Post a Comment