வெயில் விளையாடி மகிழும் நெடுஞ்சாலை நடுவில்
பதப்படுத்தப்பட்ட குளிரினைத் தாங்கிய
சிவப்பு நிற மகிழ்வுந்தின் உள்ளே
மடிக்கணினியின் மடியில் அமர்ந்தபடி
உலகை இயக்கிக்கொண்டிருக்கும் அவனுக்கு
மூடிய கண்ணாடிக்கு வெளியே
பதற்றங்களும் அவசரங்களும் நிரம்பிய உலகமொன்று
பச்சை அனுமதிக்குக் காத்திருப்பது
தெரியாது.
No comments:
Post a Comment