Wednesday, 17 November 2021
பாம்புகளின் கோடை
பாம்புகளின் கோடை
மழை முடித்து கோடை துவக்கம்
காடுகளில் வாழ்ந்த
பாம்புகளெல்லாம்
சூடு தாங்காமல்
வெளியேறத் துவங்கி விட்டன
குளங்களில் நீரில்லை
பாம்புகளின் தாகமோ பெரிது
அறுவடை இல்லாத வயல்களிலும்
நிழலுக்கெனவே வளரும்
கருவேல மரங்களையும் வேட்டிவிட்டார்கள்
காய்ந்த விறகுக்கென
பசிக்கு இரையும்
அருந்த நீரும் இணைய துணையும்
கிடைக்காத பாம்புகளை
கல்லால் அடித்து கொல்கின்றனர்
சிறுவர்கள்
அப்போதெல்லாம் இப்படியில்லை
ஏரிகள் குளங்கள் குட்டைகளென
பாம்புகளின் வாழ்க்கை
நர்த்தனங்களோடிருந்தது
மழைநீர் சேகரிப்புத் தொட்டிக்குள்
கருகிக் கிடக்கின்றன பாம்பின் சட்டைகள்
இப்போது
Subscribe to:
Posts (Atom)